வெறியை விதைக்காதீர்கள்

Short Story • Social Awareness

கல்லூரியில் மாணவர்கள் பொங்கல் விழாக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது மாணவர்கள் உற்சாகமாக ஆடிப்பாட திரைப்பாடல்கள் இசைக்கப்பட்டன.

திரைப்பாடல்களை ஒவ்வொன்றாக இயக்கிக் கொண்டிருந்தவரிடம் மாணவர்கள் தனித்தனி கூட்டமாக வந்து, “அந்த பாடலைப் போடுங்கள். இந்த பாடலைப் போடுங்கள்.” என்றார்கள்.

ஒரு குழு “நெருப்புடா” பாடலைப் போட பரிந்துரைக்க, பாடலை இயக்குபவரும் சரியென இயக்க, அந்த பாடல் இயங்கிக் கொண்டிருக்கும் போதே இன்னொரு குழு மாணவர்கள் வந்து, “இந்தா மொபைலு. எங்க சாதி பாட்டைப் போடு.” என்றார்கள். இதனால் மாணவர்கள் இடையே சண்டை உருவாகத் தொடங்கியது.

சாதிக் கலவரம் ஏற்படப்போகிறதென உணர்ந்த கல்லூரி நிர்வாகம், உடனடியாக நிகழ்ச்சியை நிறுத்தி மாணவர்களை வீடு திரும்பச் செய்தது.

இந்தியாவின் எதிர்காலத் தூண்களென்று சொல்லப்படும் மாணவர்கள், சாதி, மதம் என்ற விஷச் சிந்தனையில் சிக்கிக் கிடப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது.

இசையில் கூட சாதியைத் தேடும் வெறியை விதைத்தவர்களே, உங்களை நீங்களே திருத்திக் கொள்ளுங்கள். இல்லையெனில் அதன் விளைவு உங்கள் சந்ததியையே அழிக்கும்.

இது கற்பனை அல்ல. உண்மையில் நடந்த நிகழ்வு.

— அன்புடன் மித்திரன்
📤 Share this: WhatsApp Twitter Facebook